நுாறு சதவீதம் வாக்களிப்பு: தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
உடுமலை: சட்சபை தேர்தலில், நுாறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
சட்டசபை தேர்தலில், நுாறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம், ஜனநாயக கடமையை அனைவரும் ஆற்ற வேண்டும் என வலியுறுத்தி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்கம் ஆகியவை, உடுமலை பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
உடுமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., நமச்சிவாயம், நகராட்சி கமிஷனர் விநாயகம், தாசில்தார் கவுரி சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், தேர்தல் நடைமுறைகள், வாக்களிப்பதன் அவசியம், நுாறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி, பொதுமக்களுக்கு பாடல், நடனம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் கையெழுத்திட்டு, தேர்தலில் வாக்களிப்போம் என உறுதி ஏற்றனர்.
மேலும்
-
2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல்
-
ஆக்கிரமிப்பில் நிழற்குடை பொதுமக்கள் கேள்வி
-
100 சதவீத ஓட்டுப்பதிவே இலக்கு வாக்காளருக்கு விழிப்புணர்வு
-
குவாரிகளில் ஆளுங்கட்சியினர் லஞ்சம்: தேர்தல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு
-
முறையான தண்ணீர் திறப்பு விவசாயிகள் முறையீடு
-
படம் 3சி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் குறைகளை சுட்டிக்காட்டிய கட்சியினர்