மின்வாரியத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணிபுரிவோரை இட மாற்ற உத்தரவு

கோவை: கோவை கோட்ட மின்வாரியத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக பணிபுரிவோரை இட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரே இடத்தில் மூன்றாண்டுக்கு மேலாக பணிபுரியும் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கோவை மின் பகிர்மானத்தில் அனைத்து வட்டத்திலும் ஒரே பிரிவில் மூன்று ஆண்டுக்கு மேலாக பலரும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் இன்னும் இட மாற்றம் செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக, உதவி தலைமை தேர்தல் அதிகாரி மணிமாலாவுக்கு கோவையை சேர்ந்த பாலாஜி என்பவர், இ-மெயில் வாயிலாக புகார் அனுப்பினார். இதன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பவன்குமாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement