மோகன் நகர் சக்தி விநாயகருக்கு வரும் 25ல் மகா கும்பாபிேஷகம்
கோவை: மோகன் நகர் சக்தி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம் வரும் 25ம் தேதி நடக்கிறது.
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மோகன் நகரில் அமைந்துள்ளது, சக்தி விநாயகர் கோவில்.
கோவில் கும்பாபிேஷக விழா, நாளை மறுநாள் காலை 5 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. மதியம் 12 மணிக்கு குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் -2, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி கோவிலில் இருந்து தீர்த்த கலசம் புறப்பாடும், இரவு 7 மணிக்கு, முதல் கால பூஜையும் நடக்கிறது.
வரும் 24ம் தேதி காலை 7.30 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை 7 மணிக்கு, நான்காம் கால பூஜை, வேதபாராயணம், தீபாராதனையை தொடர்ந்து, 9 மணிக்கு, யாத்ரா தானமும், கடம் புறப்பாடும் நடக்கிறது.
காலை 9.24 முதல் 9.32 மணிக்குள் சக்தி விநாயகருக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. 10 மணிக்கு, மகா அபிேஷகம், தச தரிசனம், கோபூஜை, மகா தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.
வரும் 26 முதல் ஏப்.6ம் தேதி வரை, 12 நாட்களுக்கு தினமும், மாலை 6.30 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜை நிறைவு நாளன்று பிற்பகல் 3 மணிக்கு, கணபதி ேஹாமமும், இரவு 7 மணிக்கு, திருவிளக்கு வழிபாடும் நடக்கிறது.
மேலும்
-
2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல்
-
ஆக்கிரமிப்பில் நிழற்குடை பொதுமக்கள் கேள்வி
-
100 சதவீத ஓட்டுப்பதிவே இலக்கு வாக்காளருக்கு விழிப்புணர்வு
-
குவாரிகளில் ஆளுங்கட்சியினர் லஞ்சம்: தேர்தல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு
-
முறையான தண்ணீர் திறப்பு விவசாயிகள் முறையீடு
-
படம் 3சி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் குறைகளை சுட்டிக்காட்டிய கட்சியினர்