உடைகிறது திமுக கூட்டணி; தனித்துப்போட்டியிட மார்க்சிஸ்ட் தயார்!
நமது நிருபர்
தொகுதிகளை குறைக்கும் திமுக முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளில் மட்டும் தனித்துப்போட்டியிடலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு, பொதுக்குழுவினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் திமுக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு, கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த தேர்தலில், 6 தொகுதிகள் தர முடியாது; 5 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று திமுக தலைமை திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதனால், இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவோம் என்று கூறி, கட்சியினரை தயார் செய்து வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
திமுக முடிவை ஏற்பதா, அடுத்து என்ன முடிவு செய்வது என்பது பற்றி தீர்மானிக்க, இன்று அந்த கட்சியின் மாநிலக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடந்தன.
இதில், நமக்கு செல்வாக்குள்ள இடங்களில் மட்டும் தனித்துப் போட்டியிடலாம்; மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரிக்கலாம் என்று கட்சியினர் தெரிவித்தனர். கட்சி நிர்வாகிகளும் இந்த மனநிலையில் தான் இருக்கின்றனர். இதனால் திமுக கூட்டணி, உடையும் நிலையில் இருக்கிறது.
விசிக நிலை என்ன?
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இன்னொரு முக்கிய கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தொகுதி குறைப்பை ஏற்க மறுத்து முரண்டு பிடிக்கிறது. அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனே நேரில் பேசியும் பிரச்னை தீரவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியை போல, தாங்களும் முடிவு எடுப்பதா, திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொள்வதா என்று முடிவெடுக்க முடியாத நிலையில் திருமாவளவன் தவிப்பதாக, அக்கட்சியினர் கூறுகின்றனர்.
@block_B@
தனி மேடையில் பிரசாரம்: மார்க்சிஸ்ட் வரலாறு
மார்க்சிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் முரண்பட்டு தனித்துப் போட்டியிட்ட வரலாறு ஏற்கனவே நிகழ்ந்திருக்கிறது. 1998 லோக்சபா தேர்தலில் திமுகவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் தொகுதி குறைப்பு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் கட்சி, 6 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாகவும், மற்ற தொகுதிகளில் தனி மேடையில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் அறிவித்தது. அதன்படியே செய்தும் காட்டியது. அத்தகைய வரலாறு, மீண்டும் ஒரு முறை இந்த தேர்தலில் ஏற்பட வாய்ப்புள்ளதாக, இன்று நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு, செயற்குழு கூட்ட முடிவில் தகவல்கள் வெளியாகியுள்ளன. block_B
மார்க்சிஸ்ட்,,,, திராணி இருந்தா தனியா நின்னு டெபாசிட் வாங்கு பார்க்கலாம்.... ஹஹஹஹஹ.. ..
எல்லாம் ஒரு நாடகம் கொடுக்கற 5 வாங்க தான் போறாங்க கொஞ்சம் பசை அதிகமா வேனும் அவ்வளவு தான்
இதைத்தான் ரெமோவா நாலா எதிர் பார்த்து காத்திருந்தோம் . 20 சதவீத வாக்கு வாங்க வில்ல என்றால் கட்சியை களைத்து விடலாம்
வீராப்பு நல்லா தான் இருக்கு, டெபாசிட் கிடைக்கனுமே. எதுக்கும் ஒரு எட்டு அதிமுக ஆபிஸ் போயிட்டு வாங்க அல்லது பனையூருக்கு ஒரு ட்ரிப் அடிங்க.
உண்டியலுக்கு ஊருக்கு 100 ஓட்டு கிடைக்கும்.தொகுதி பிரச்சனை இருக்காது.காசு வந்திருக்காது.
மானம் ரோஷம் சூடு சொரணை இருந்தால் சரி..
வாய்ப்பிலை...திமுக கேட்கும் தொகுதி கொடுத்து தக்க வைத்துவிடும்.
எனது ஓவியமே.கீழே விழுந்தாலும்...
கொஞ்சம் லட்டு உருண்டையை சேர்த்து கொடுத்தால்.. ஓ. கே. அதற்குதான் இந்த நாடகம்
இந்த விஷயத்தில் த வா க வின் துணிச்சலை பாராட்டுகிறோம். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு. இப்போ பண்ணினாலும் சரி. எப்பவோ பண்ணியிருந்தாலும் சரி. பாக்கி யெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். ரஜினி மாதிரி மிரட்டலுக்கு பயப்படாத வன்.அது மாதிரி எல்லா கட்சிகாரனுங்களும் திருட்டு தீயமுக வை தூக்கி நடுரோட்டில் எறியணும்.மேலும்
-
'டார்ச் லைட்'டில் போட்டியா? கமலின் குழப்பமான விளக்கம்
-
திருப்பூர் நிறுவனங்களுக்கு சி.என்.ஜி. இணைப்பு; ஏற்றுமதியாளர்களிடம் தமிழக அரசு உறுதி
-
தி.மு.க., மீது மக்கள் கோபம்; வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
தேர்தலுக்கான வாகன ஏற்பாடு: ஆர்.டி.ஓ. நியமிக்காததால் சிக்கல்
-
தாய், குழந்தையை கடத்தி ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி; அண்ணாமலை கண்டனம்
-
தேர்தல் நடவடிக்கை மேற்பார்வையாளர் ஆய்வு