பள்ளி வாசல்களில் ரம்ஜான் தொழுகை
விழுப்புரம்: ரம்ஜான் பண்டிகையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, ஒருவரை, ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும், பலர் வீடுகளில் ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர்.
செஞ்சி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஜமா அத் தலைவர் மஜீத் பாபு தலைமையில் ஊர்வலம் வந்தனர். காலை 8.30 மணிக்கு செஞ்சி கூட்ரோட்டில் பிறை கொடி ஏற்றினர். செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதியில் ஊர்வலம் முடிவடைந்ததும் அங்கு 9:.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.
சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை ஈத்கா மைதானத்தில் மஸ்தான் எம்.எல்.ஏ., பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி உட்பட ஏராளமானவர்கள் தொழுகை நடத்தினர்.
அவலுார்பேட்டை அவலுார்பேட்டை மசூதியில் நேற்று காலை 8:00, மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு, சிறப்பு வாஜிப் தொழுகையும், சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து ஏழைகளுக்கு தான, தர்மங்கள் வழங்கினர்.
திண்டிவனம் திண்டிவனம் ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 8:00 மணியளவில் நடந்த சிறப்புத் தொழுகையில், திரளான முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.
மேலும்
-
'டார்ச் லைட்'டில் போட்டியா? கமலின் குழப்பமான விளக்கம்
-
திருப்பூர் நிறுவனங்களுக்கு சி.என்.ஜி. இணைப்பு; ஏற்றுமதியாளர்களிடம் தமிழக அரசு உறுதி
-
தி.மு.க., மீது மக்கள் கோபம்; வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
-
தேர்தலுக்கான வாகன ஏற்பாடு: ஆர்.டி.ஓ. நியமிக்காததால் சிக்கல்
-
தாய், குழந்தையை கடத்தி ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி; அண்ணாமலை கண்டனம்
-
தேர்தல் நடவடிக்கை மேற்பார்வையாளர் ஆய்வு