5 கிலோ கஞ்சா பறிமுதல் இளைஞர் கைது
பூந்தமல்லி: திருவேற்காடு பேருந்து நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு சந்தேகிக்கும் வகையில் திரிந்த வாலிபரை, பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பிடித்தனர். அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
பிடிபட்டவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 25, என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி, பூந்தமல்லி பகுதியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement