செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: கல்பட்டு செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.

விழுப்புரம் அடுத்த கல்பட்டு கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர், தண்டபாணி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 25ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, நாளை 22ம் தேதி காலை 9:00 விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. 23ம் தேதி காலை 9:00 மணிக்கு நவக்கிரஹ ஹோமங்கள், மாலை 5:00 மணிக்கு கும்ப அலங்காரம் முடிந்து முதல் கால யாகசாலை பூஜை தொடங்கிறது.

தொடர்ந்து 24ம் தேதி காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.

கும்பாபிேஷக தினமான 25ம் தேதி காலை 8:30 மணிக்கு நான்காம் கால யகசாலை பூஜையும், 9:30 மணிக்கு செல்வ விநாயகர், தண்டபாணி சன்னதியில் தொடங்கி, காசிவிஸ்வநாதர், கால பைரவர், வெங்கடாஜலபதி, பக்த அனுமார், வராஹி அம்மன், நவகிரக சன்னதி கோபுரங்களில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.

Advertisement