கொடிசியாவில் கண்காட்சி பாதி விலைக்கு பர்னிச்சர்
கோவை: பாதி விலைக்கு உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனையில், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி, கொடிசியா வர்த்தக மையத்தில், வரும் 23ம் தேதி வரை நடக்கிறது.
வீடு, அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர் கண்காட்சியில், 10க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகளில், 1,200க்கும் மேற்பட்ட மாடல்களில், தொழிற்சாலையில் இருந்து வரவழைத்து விற்கப்படுவதால், பாதி விலையில் வாங்கலாம்.
இத்தாலி, இந்தோனேஷியா, மலேஷியா ஆகிய வெளிநாட்டு பிராண்டுகள் மற்றும் உள்நாட்டு உயர்தர மாடல்களின் இன்டீரியர் புராடக்ட்ஸ், டிரஸ் மெட்டீரியல், பேஷன் புராடக்ட்ஸ் ஆகிய பல பொருட்கள் உள்ளன.
உற்பத்தி விலைக்கே கிடைக்கிறது. பர்னிச்சருக்கு 3-5 ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப் படுகிறது. ஆடைகள், நகைகள், பேஷன் பொருட்கள், பரிசு பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.
டெபிட், கிரடிட் கார்டு வசதி உண்டு. வட்டி இல்லாமல் சுலப மாத தவணையில், ஸ்பாட் லோன் கடனுதவி வசதியும் உண்டு.
கண்காட்சி காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும். இதை, பிராம்ப்ட் டிரேட் பேர்ஸ் நிறுவனம் நடத்துகிறது.