காற்றால் 120 ஏக்கர் ம.சோளம், 7,500 வாழை சேதம்
மேட்டூர்; மேட்டூர் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று முன்-தினம் இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்-தது. இது, 58.8 மி.மீ., ஆக பதிவானது. இதனால் ஆங்காங்கே மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்-தன.
குறிப்பாக கொளத்துார், மூலக்காடு ஊராட்சி அச்-சங்காட்டை சேர்ந்த விவசாயி சின்னசித்தன், 85, என்பவர், 2.5 ஏக்கரில் சாகுபடி செய்த, 2,350 கதலி ரக வாழை மரங்களில், குலைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முறிந்து விழுந்து சேதமாகின.பண்ணவாடி, தெலங்கனுார், கோவிந்த பாடி உள்-பட அதன் சுற்றுப்பகுதி ஊர்களில், 3,150 வாழை மரங்கள் சேதமாகின. கொளத்துாரில், 4.5 ஏக்கரில் சாகுபடி செய்த மக்காச்சோள பயிர்களும் சேதமா-கின. அந்த இடங்களை, கொளத்துார் வட்ட தோட்-டக்கலை, வேளாண் அலுவலர்கள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
காடையாம்பட்டி
காடையாம்பட்டி அருகே கொங்குபட்டியை சேர்ந்த செல்வம், 50, தோட்டத்தில் செவ்வாழை, மொந்தன் என, 1,200 வாழை மரங்கள் முறிந்தன. கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த நடராஜன், 48, தோட்டத்தில், 800 வாழை மரங்கள் முறிந்தன. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்,
வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
இடைப்பாடி, தளவாய்ப்பட்டி வாரக்காட்டில், விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில் இருந்த, 1,500க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள், பலத்த காற்றுக்கு சேதமடைந்தன. பூலாம்பட்டி-யிலும் ஆங்காங்கே வாழை மரங்கள் உடைந்தன. சங்ககிரி அருகே தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்-பட்டி, காவேரிப்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, கல்-வடங்கத்தில் செவ்வாழை, பூவன் உள்ளிட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
ஆத்துார், புதுப்பாளையம் ராஜாலிங்கம் என்பவர் சாகுபடி செய்துள்ள ஒரு ஏக்கர் பாக்கு மரங்களில், 20க்கும் மேற்பட்ட மரங்கள், அரை ஏக்கரில் மக்-காச்சோள பயிர்கள் முறிந்தன. ராமமூர்த்தி நகரில் கோவிந்தனின், 2 ஏக்கர், ராஜமாணிக்-கத்தின், 3 ஏக்கர், முத்துலட்சுமி, செல்வத்தின், தலா, 2 ஏக்கர் உள்பட, 10க்கும் மேற்பட்ட விவசா-யிகளின், 20 ஏக்கரில், மக்காச்சோள பயிர்கள் முறிந்து விழுந்தன. தவிர, 20க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்தன. சேதமடைந்த பயிர்-களுக்கு, அரசு சார்பில் நிவாரணம் வழங்க, விவ-சாயி கள் வலியுறுத்தினர்.
கெங்கவல்லி, நடுவலுார், பள்ளக்காடு, ஆணை-யாம்பட்டி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகு-படி செய்திருந்த, 100 ஏக்கருக்கு மேற்பட்ட மக்-காச்சோளம் சேதமடைந்துள்ளது. கெங்கவல்-லியில், 10 ஏக்கரில் விளைந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கமலம் தலைமையில் வேளாண் அலுவலர்கள், நேற்று ஆய்வு செய்து, பாதிப்பு விபரங்களை சேக-ரிக்கும் பணியில்
ஈடுபட்டனர்.
இடைப்பாடியில் அதிகம்
சேலம் மாவட்டத்தில், 2ம் நாளாக நேற்று முன்-தினம் இரவு, இடி - மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக இடைப்பா-டியில், 88.4 மி.மீ., மழை பதிவானது.
சங்ககிரியில், 81, மேட்டூர், 58.8, சேலம், 41.3, டேனிஷ்பேட்டை, 21, ஆத்துார், 15.6, புழுதிக்-குட்டை, 15, கரியகோவில், கெங்கவல்லி தலா, 12, தம்மம்பட்டி, 11, நத்தக்கரை, 9, வீரகனுார், 8, ஏற்காடு, 6, ஓமலுார், 3, ஏத்தாப்பூர், 2, வாழப்பா-டியில், 0.5 மி.மீ., மழை பதிவானது.