சட்டசபை தேர்தல் பணிக்கு ஊர்காவல் படைக்கு பயிற்சி

நாமக்கல்; சட்டபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஊர்காவல் படையினருக்கு பாதுகாப்பு குறித்து சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.


தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, வரும் ஏப்., 23ல் நடக்கிறது. மே, 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. அதற்காக, நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த சிஆர்.பி.எப்., வீரர்கள், பறக்கும் படையினர், தேர்தல் அலுவலர்கள், போலீசார் என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தேர்தல் பணியில் முழுவீச்சில் மேற்கொண்டுள்-ளனர். போலீஸ் துறையில், 1,200 பேரும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 80 பேரும் என்ற நிலையில், மாவட்ட ஊர்காவல் படையில் உள்ள, 275 பேரையும் தேர்தல் பணியில் களமி-றக்க எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலின் போதும், முக்கிய தலை-வர்கள் பிரசாரத்தின் போதும், ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை நாள்களில் பாது-காப்பு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தும் வகையில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

Advertisement