ஒரு ஓட்டு... ஒரு மாற்றம்! ஓட்டளிக்க விழிப்புணர்வு
நாமக்கல்; தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், அனை-வரும் ஓட்டளிக்கும் வகையில், தேசியக்கொடி வண்ணத்தில், மூவர்ண பலுான்களை பறக்க-விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம், தமிழக சட்-டசபை பொதுத்தேர்தல்-2026க்கான தேர்தல், ஏப்., 23ல் நடக்கிறது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் ஓட்டுபோடுவதை உறுதி செய்யும் வகையில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்-தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி, 'ஒரு ஓட்டு... ஒரு மாற்றம்', 'உங்கள் ஓட்டு நாட்டின் எதிர்காலம்' என, வலியுறுத்தி, தேசியக்கொடி வண்ணத்தில், மூவர்ண பலுான்-களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதையடுத்து, தேர்தல் நாளான, ஏப்., 23 குறித்து, வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்ர் ஒட்டப்பட்-டது. மேலும், மலர் சந்தை, பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை ஆகிய இடங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு, தேர்தல் விழிப்பு-ணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்-யப்பட்டது.
டி.ஆர்.ஓ., சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, அரசுத்துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது