சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ
நெய்வேலி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடைக்காரரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் ராம்குமார்.36; டீக்கடை நடத்தி வருகிறார்.
இவர், யூ.கே.ஜி., படிக்கும் 4 வயது சிறுமி விளையாட சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement