புதுச்சேரியில் ஏப்ரல் 4, 5 தேதிகளில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: அனைத்து கல்வி சந்தேகங்களையும் தீர்த்து கொள்ள அரிய வாய்ப்பு 

புதுச்சேரி: உயர்கல்வி குறித்த முழுமையான புரிதலை வழங்கும் மாபெரும் கல்வித் திருவிழாவான, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடக்கிறது.

பிளஸ் 2 பொதுத்தேர்வை முடித்துவிட்டு, அடுத்து எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது, எந்தக் கல்லுாரியில் சேருவது என்ற குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

உயர்கல்வி குறித்த முழுமையான புரிதலை வழங்கும் இந்த மாபெரும் கல்வித் திருவிழா, வரும் ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் புதுச்சேரி 100 அடி சாலையில், மரப்பாலம் சிக்னல் அருகிலுள்ள சுகன்யா அரங்கில் சிறப்பாக நடக்க உள்ளது. இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கல்வி நிறுவனங்களின் அரங்குகள் மற்றும் நிபுணர்களின் கருத்தரங்குகள் எனத் தொடர்ச்சியாகத் மாணவ செல்வங்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.



ஸ்டால்கள்

இந்தக் கல்வி வழிகாட்டி திருவிழாவில் 80க்கும் மேற்பட்ட முன்னணி கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களது ஸ்டால்களை அமைக்கின்றன. இதன் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒவ்வொரு கல்லுாரியாக ஏறி இறங்க வேண்டிய அவசியமின்றி, ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் பாடப்பிரிவுகள், கட்டண விவரங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைத் தெரிந்து கொள்ளலாம். நேரடியாகக் கல்வி நிறுவனப் பிரதிநிதிகளிடம் பேசித் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் அரிய வாய்ப்பு இது.



நவீன காலப் படிப்புகள்:

காலமாற்றத்திற்கு ஏற்ப வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை மாணவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம். அந்த எதிர்கால படிப்புகளுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி வழிகாட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி போன்ற வளர்ந்து வரும் துறைகளில் உள்ள பிரகாசமான எதிர்காலம் குறித்து நிபுணர்கள் விளக்கமளிக்க உள்ளனர்.



போட்டித் தேர்வுகள்:

சிவில் சர்வீசஸ், நீட் , ஜெ.இ.இ., மற்றும் சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகள் வரை அனைத்துத் தேசிய அளவிலான தேர்வுகள் குறித்தும், அவற்றுக்குத் தயாராகும் முறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படும்.



உதவித்தொகை:

வழிகாட்டி நிகழ்ச்சி வந்தால், உயர்கல்வி பயிலத் தடையாக இருக்கும் பொருளாதாரச் சிக்கல்களைப் போக்க, பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி உதவித்தொகை வாய்ப்புகள் குறித்தும் தெளிவான விளக்கங்களை பெறலாம்.



மாணவர்களை உற்சாகப்படுத்த..

இந்நிகழ்ச்சி வெறும் தகவல் வழங்கும் இடமாக மட்டுமின்றி, மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் தளமாகவும் அமைகிறது. கருத்தரங்கின் போது கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். இது மாணவர்களிடையே ஒரு புத்துணர்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.



சரியான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு, ஒருவரின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. அந்த வகையில், பிளஸ் 2 மாணவர்கள் தங்களின் லட்சியப் பாதையைத் துல்லியமாகத் தீர்மானிக்க தினமலர் வழிகாட்டி ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து வருகிறது. இந்த இலவச அரிய வாய்ப்பை மாணவ செல்வங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.



பாக்ஸ்.,



இணைந்து வழங்குவோர்

நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யாபீடம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ருசி பால் நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.



இலவச முன்பதிவிற்கு

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்க கியூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்து அல்லது 9566777833 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் RGN என்று டைப் செய்து பதிவு செய்யலாம்.

ஸ்டால் புக்கிங்.... தினமலர் வழிகாட்டி ஸ்டால் புக்கிங்கிற்கு 98940-09059, 99449-63834 என்ற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்.

Advertisement