தேர்தல் நடவடிக்கை மேற்பார்வையாளர் ஆய்வு
காங்கயம்: காங்கயத்தில், மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனை கண்காணிக்க மாவட்ட அளவில் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை காங்கயம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் செலவினம் குறித்த கணக்குகளை செலவின மேற்பார்வையாளர் மொசுகண்டி கங்காதர் நேரில் ஆய்வு செய்தார். பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவை பார்வையிட்ட அவர், தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் குறித்த நடவடிக்கைகளை மாவட்ட பொது மேற்பார்வையாளர் சுதாவர்மா நேரில் செய்தார்.
இதுதவிர, பொதுமக்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள் அதிமுள்ள காங்கயம் பஸ் ஸ்டாண்டில் நோட்டீஸை வழங்கினார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன், உதவி தேர்தல் அலுவலர் தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; போதை நபர் கைது
-
அரசு பேருந்தில் திடீர் தீ 60 பயணியர் தப்பினர்
-
கழிவு மீன் நிறுவனங்களை மூட கோரி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
-
தொட்டியத்தில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
-
கள் இறக்கியவர்கள் கைது எதிர்த்த 55 பேர் மீது வழக்கு
-
தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காயம்