திருப்பூர் நிறுவனங்களுக்கு சி.என்.ஜி. இணைப்பு; ஏற்றுமதியாளர்களிடம் தமிழக அரசு உறுதி
திருப்பூர்: தொழில்துறையினர் விரும்பினால், முன்னுரிமை அடிப்படையில், திருப்பூருக்கு சி.என்.ஜி., இணைப்பு வழங்க முயற்சிக்கப்படும் என, தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
பின்னலாடை தொழிலில், சாயமிடுதல், பிரின்டிங் செய்தல், நான்கு லட்சம் தொழிலாளருக்கு உணவு தயாரித்தல் போன்ற பணிகளுக்காக, தினமும், 204 டன் அளவுக்கு, எல்.பி.ஜி., காஸ் தேவைப்படுகிறது. ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட தேவைகளுக்கு, தினம், 150 டன் காஸ் தேவைப்படுகிறது. பின்னலாடை தொழில் சார்ந்து, தினமும் 350 டன் அளவுக்கு காஸ் தேவைப்படுகிறது.
உலகளாவிய வர்த்தக சிக்கல் மற்றும் போர் சூழலால், பல்வகை கட்டண உயர்வுகளால், பனியன் தொழில் ஸ்தம்பித்து போயுள்ளது. காஸ் தட்டுப்பாடு அதிகரித்தால், ஏற்றுமதி வர்த்தகமும் பாதிக்கப்படும். எனவே, தொழில்துறையினருக்கு, தேவையான காஸ் சிலிண்டர்களை வழஙக வேண்டுமென, தலைமை செயலரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
எல்.பி.ஜி., காஸ் தட்டுப்பாடு தொடர்பாக, தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து, உரிய தீர்வு வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில்துறையினரை அழைத்து பேசினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர், நேற்று சென்னையில் தலைமை செயலாளரை சந்தித்தனர். திருப்பூர் பின்னலாடை தொழில் சார்ந்த காஸ் தேவைகள் தொடர்பாக, தலைமை செயலாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். தட்டுப்பாடு நிலவும் இச்சூழலில், சரியான மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் எல்.பி.ஜி-. தேவை அதிகமாக உள்ளது. பல்வேறு சூழலால், காஸ் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சி.என்.ஜி அதிக அளவில் கிடைப்பதால், எல்.பி.ஜி.,க்கு பதிலாக பயன்படுத்த முன்வர வேண்டுமென அரசு தரப்பு பரிந்துரைத்துள்ளது. உடனடியாக, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொழிலாளர்களுக்கு தடையற்ற உணவு வினியோகத்தை உறுதி செய்யவும், விடுதி மற்றும் உணவக பகுதிகளில் தற்காலிகமாக சமுதாய சமையலறையை அமைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலக்கரியை வினியோகத்தில், போதிய கையிருப்பு இருப்பதாக 'கோல் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது.'கோல் இந்தியா' நிறுவனத்துடன் இணைந்து, நிலக்கரி வினியோகம் செய்வது தொடர்பாக திட்டமிட்டு, வரும் வாரத்தில் அதுகுறித்து அறிவிக்கப்படும் என்று தலைமை செயலர் தெரிவித்துள்ளார் . திருப்பூருக்கு வெளியே எரிவாயுக் குழாய் வசதி உள்ளது. சி.என்.ஜி., காஸ் ஏற்றுக்கொள்வதில் தொழில்துறையின் விருப்பத்தைப் பொறுத்து, தமிழக அரசு, முன்னரிமை அடிப்படையில், இணைப்புகள் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
@quote@ உடனடியாக, எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்கவும், தொழிலாளர்களுக்கு தடையற்ற உணவு வினியோகத்தை உறுதி செய்யவும், விடுதி மற்றும் உணவக பகுதிகளில் தற்காலிகமாக சமுதாய சமையலறையை அமைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதுquote
@block_B@ வணிக சிலிண்டர் தடை நீங்குமா? தொழில்துறையினரின் சிரமங்களை உணர்ந்து, வணிக காஸ் சிலிண்டர் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்; வணிக காஸ் வினியோரத்தை ரத்து செய்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.block_B
மேலும்
-
சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; போதை நபர் கைது
-
அரசு பேருந்தில் திடீர் தீ 60 பயணியர் தப்பினர்
-
கழிவு மீன் நிறுவனங்களை மூட கோரி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
-
தொட்டியத்தில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
-
கள் இறக்கியவர்கள் கைது எதிர்த்த 55 பேர் மீது வழக்கு
-
தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காயம்