தாய், குழந்தையை கடத்தி ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி; அண்ணாமலை கண்டனம்
சேலம்: சேலத்தில் நிலத்தகராறு காரணமாக தாய் மற்றும் அவரது பெண் குழந்தையைக் கடத்தி ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய திமுக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; சேலம் அன்னதானப்பட்டி பகுதியில், நிலத் தகராறு காரணமாக, தாய் மற்றும் பெண் குழந்தையை கடத்திச் சென்று, ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியிருக்கிறார்கள் திமுக கொண்டலாம்பட்டி பகுதி அவைத்தலைவர் பதவியில் இருக்கும் செந்தூர் கார்த்தி என்ற நபரும், அவரது நண்பரும்.
ஆளுங்கட்சி என்ற மமதையிலும், அரசியல் செல்வாக்கு போர்வையிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியிருப்பது வெட்கக்கேடானது. திமுக ஆட்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணம், திமுகவில் பதவி வகிக்கும் இது போன்ற சமூக விரோதிகள்தான். முற்றிலும் மனிதத்தன்மையற்ற அளவுக்கு திமுகவினரின் சமூக விரோதச் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
சமூகத்தின் அமைதிக்கும், நமது பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் திமுக எனும் தீய சக்தியை, மக்கள் முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் இது.
இந்த சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லுக்கு சீலை கட்டி விட்டால்க்கூட தீம்க்கா ஆட்சியில் அதற்கும் ஆபத்து. அதிகார போதையில் மிதக்கும் பலர், இவர்களை ஆள செயல்படாத துருப்பிடித்த இரும்புக்கை...
யோவ், இது மாதிரியெல்லாம் அவன் செய்யவில்லையென்றால், அவன் திமுக வில் இருக்கும் தகுதியை இழந்து விடுவான்யா. இதெல்லாம் அவர்களின் அடிப்படைத் தகுதி.
சர்வாதிகாரியின் இரும்புக்கரமானது இப்போது கரன்சியை எண்ணுவதிலே சிக்குண்டு இருப்பதால் நடவடிக்கை எடுக்க முடியல போல.
அக்மார்க் திமுககாரன்
எப்பவோ பாவக்காவுடன் கூட்டணி வைத்ததன் தோஷம் இன்னுமா தொடரவேண்டும்?
இந்த மாதிரி செய்திகள் மட்டும் எப்படித்தான் மட்டும் இவருக்கு கிடைக்கிறதோ.
மத்தியில் ஆட்சி அதிகாரம் வைத்துள்ள பாஜாக என்ன கிழிக்கிறது, தேர்தலை ஏன் நடத்தனும், தமிழகம் சீரழிய முதற் காரணம்,மோடி
ஆமாம், ஆளத் தெரியாத காமடி சர்வாதிகாரி ஆட்சியை என்றோ கலைத்திருக்க வேண்டாமா?. சட்டம் ஒழுங்கும் தெரியலை. எங்களுக்கு திமுகவே வேண்டாம் போடா..
அது எப்படி தமிழ்நாட்டுல யாரு குற்றம் செஞ்சாலும் அது திமுக காரன் தான் என்பது உங்களுடைய மன நோயா.....
திராவிட மாடல் நிர்வாகி அப்படி செய்யலன்னாதான் ஆச்சரியம் ........
இப்படி திரும்ப திரும்ப புலமபுவதால் திராவிடம் அழியுமா? மாநில பிரிவினை அதிகாரம் மத்திய அரசு கைகளில் உள்ள போது புலம்புவது கேவலம்.. செக்யூரிட்டி எமர்ஜென்சி டிக்ளேர் செய்து கவர்னர் பரிந்துரை செய்தால் ஜனாதிபதி ஏற்பளித்தால் உடனடியாக மாநில பிரிவினை செய்யலாமே? ஜெ. இறந்தவுடனேயே இந்த நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை நேரம் திராவிடம் பெரும்பாலும் அழிந்திருக்கும்.. கூட்டணிக்கு ஆசைப்பட்டு உள்ளதையும் யார் கோட்டை விடச் சொன்னது..தென் மாவட்டங்கள் சிறந்த முறையில் வளர்ந்திருக்கும்.மேற்கு மாவட்டங்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்திருக்கும்..வட மாவட்டங்களில் திராவிடம் ஐசியூ வில் இழுத்து கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டு இருந்திருக்கும்..காலம் தங்கத் தட்டில் வைத்து கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்டது பாஜக.....மேலும்
-
சொகுசு பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; போதை நபர் கைது
-
அரசு பேருந்தில் திடீர் தீ 60 பயணியர் தப்பினர்
-
கழிவு மீன் நிறுவனங்களை மூட கோரி தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு
-
தொட்டியத்தில் 200 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்
-
கள் இறக்கியவர்கள் கைது எதிர்த்த 55 பேர் மீது வழக்கு
-
தேர்தல் செலவின பார்வையாளர் கார் மோதியதில் ஒருவர் காயம்