தி.மு.க., மீது மக்கள் கோபம்; வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்; மத்திய அமைச்சர் எல்.முருகன்
மேட்டுப்பாளையம்: "திமுக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர்" என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது: காவல் துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா, போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. விளாத்திகுளம் அருகே, பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
கொங்கு மண்டலத்தில் முதிய தம்பதியர் குறி வைத்து கொலை, நாங்குநேரியில் குடியிருப்பு பகுதிகளில் கஞ்சா போதை கும்பல் அட்டகாசம் என, கஞ்சா ஆசாமிகளின் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனால் மக்கள் அச்சத்திலேயே வாழும் மோசமான நிலை உள்ளது.
தி.மு.க.,வின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில், குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் கோபத்தில் உள்ளனர். வரும் தேர்தலில், தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்ப அவர்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
கொல்லைப்புற மந்திரி...சீக்கிரம் வூட்டுக்கு போய்த்தான் ஆகணும்.
மக்களை சந்தித்து தோற்று போனவர் இவர். இவர் மந்திரி. வெட்கக்கேடு. மக்களை சந்தித்து தோற்றவர்கள் தமிழிசை ஒரு ஆளுநர் இப்போது அதிமுகவை மிரட்டி சீட் வாங்கி ஜெயிக்க முயற்சி. அதிமுக வோட்டு வாங்கி இப்போது கண்டிப்பாக பிஜேபி கட்சிக்கு வோட்டு போடாது பிஜேபி டெபாசிட் இழக்கும் தமிழக மக்களுக்காக என்ன செய்தது. திமுக அதிமுக ஊழல் காட்சிகள் அனால் பேரிடர் காலத்தில் மக்களுடன் இருக்கிறார்கள். 39 திமுக கூட்டணி எம்பிக்களும், 4 பிஜேபி எமேலஏக்களும் என்ன செய்தார்கள். போட்டோஷூட் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். அண்ணாமலை சீன் போட்டு கொண்டு இருகிறார் . தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள்
தி.மு.க., மீது மக்கள் கோபம் வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றனர் மத்திய அமைச்சர் எல்.முருகன் ....... அப்படியா .......... எனக்கு அப்படித் தோணல ....... என்ன, கொஞ்சம் அதிகமா எதிர்பார்ப்பாங்க .......
நீங்கள் தேர்த்லில் நில்லுங்கள் . உங்களையும் மக்கள் வீட்டிற்கு அனுப்பு விடுவார்கள் .
மத அரசியல் கூட்டத்தை வெற்றிலை பாக்கு வைத்து வரவேற்க மக்கள் வரிசையில் நிற்கிறார்களா என்ன? தமிழ்நாட்டில் கனவிலும் நடக்காது
இப்படி சொல்லிட்டு தொகுதி மாறி தேர்தலில் நிற்கும் அல்லக்கை
டப்பா மாடல் கழகம் டி எம் கே இந்த தேர்தலில் 20 இடத்திற்கும் குறைவாகத்தான் பெறும் . உங்களுக்கு மே மாதம் முதல் 200 வராது என நம்பத்தகும் வட்டரங்கள் தெரிவிக்கின்றனமேலும்
-
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மவுண்ட்பார்க் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
-
சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ
-
மீன் பிடிக்க வழியின்றி மீனவர்கள் வாழ்வாதாரம்.. கேள்விக்குறி ! மணல் திட்டுகளால் பாழாகும் பழவேற்காடு ஏரி
-
தேர்தல் கெடுபிடியால் பட்டு சேலை விற்பனை...படுமந்தம்! கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதிப்பு
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 ஏரி, குளங்கள்..அழிவின் விளிம்பில்! தரிசு நிலங்களாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை
-
ஓ.எம்.ஆரில் ரூ.1,500 கோடியில் குடிநீர் பணி முடிந்தும்..பயனில்லை! கம்பி நீட்டிய' நிறுவனங்களால் குடியிருப்புகளுக்கு சிக்கல்