தேங்காய் பருப்பு ஏலம் ரூ.2 லட்சத்துக்கு வர்த்தகம்
திருப்பூர்:முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடக்கிறது. அதன்படி நடந்த கொப்பரை ஏலத்தில், 336 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக கிலோ, 148.70 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக, 125.70 ரூபாய்க்கும்ஏலம் போனது. மொத்தம், 336 கிலோ கொப்பரை, 51 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 16 விவசாயிகள் பங்கேற்றனர்.
தேங்காய் ஏலத்தில், 32 பேர் நேற்று ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 12,950 தேங்காய் கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் கிலோ, 52.70 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 38.70 ரூபாய்க்கும், சராசரி, 50.90 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 2 லட்சத்து, 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, விற்பனை கூட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
Advertisement
Advertisement