புதுச்சேரியில் 6 நாளில் 135 மனுக்கள் தாக்கல்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கி கடந்த 6 நாட்களில் மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலுக்கான மனுத் தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாட்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை. 18ம் தேதி முதல் மனு தாக்கல் செய்யப்பட்டன. முதல் 5 நாட்களில் 134 மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்கு நேற்று சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகைக்காக பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. மாகியில் மட்டும் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சுயேச்சையாக ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்தார். மொத்தமாக 29 தொகுதிகளில் 6 நாட்களில் 119 பேர் 135 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ராஜ்பவன் தொகுதியில் மட்டும் இதுவரை ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிகமானோர் மனுதாக்கல் செய்யவார்கள் என்பதால் அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

Advertisement