சிறப்பு ரயில்களிலும் கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள்
சென்னை: 'சிறப்பு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே வாரியத்தின் உத்தரவை தொடர்ந்து, கடந்த ஒரு ஆண்டாக, விரைவு ரயில்களில் கூடுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன.
தெற்கு ரயில்வேயில், சென்னை சென்ட்ரல் - டில்லி, ஏற்காடு, போடிநாயக்கனுார், எழும்பூர் - திருநெல்வேலி, துாத்துக்குடி, தாம்பரம் - செங்கோட்டை உட்பட 40க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது, சிறப்பு ரயில்களிலும் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து விரைவு ரயில்களிலும், நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைக்க, வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தெற்கு ரயில்வேயில் திட்டமிட்டுள்ள, 51 ஜோடி விரைவு ரயில்களில், இதுவரை 40க்கும் அதிகமான விரைவு ரயில்களில், கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைத்து இயக்கப்படுகின்றன.
புதிய பெட்டிகள் வந்ததும், எஞ்சியுள்ள விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும்.
இதேபோல், பயணியர் தேவையை கருத்தில் வைத்து இயக்கப்படும், சிறப்பு ரயில்களிலும், இனி வரும் நாட்களில் மூன்று அல்லது நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகளை இணைத்து இயக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு
-
பங்குனி உத்திரத்தில் வேட்பு மனு :த.வெ.க., வேட்பாளர்கள் முடிவு
-
வெளிமாநில மதுபாட்டில் கடத்திய நபர் கைது
-
தேர்தல் அறிவிப்புக்கு பின் முதல்முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி; ஏப்.4ல் சென்னையில் பிரசாரம்
-
மேல்சித்தாமூர் பார்சுவநாதர் கோவில் தேர் திருவிழா
-
சென்னை நெடுஞ்சாலையில் தி.மு.க., நிர்வாகி மறியல்