தமிழ்நாடு வழக்கறிஞர் சங்க தேர்தல் ஓட்டுப்பதிவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது.

தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் (பார் அசோசியேஷன்) சங்கத்துக்கான தேர்தல் நேற்று நடந்தது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில், முதலில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிறகு அவர்கள் மூலம் தலைவர் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி மொத்தமுள்ள 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில், இத்தேர்தல் நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5:00 மணி வரை நடந்தது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, வானுார் ஆகிய நீதிமன்றங்களில் இத்தேர்தல் நடந்தது.

மாவட்டம் முழுதுமிருந்தும் 1,500க்கும் மேற்பட்ட வழங்கறிஞர்கள் தேர்தலில் ஓட்டு போட்டனர். இத்தேர்தலில் 143 பேர் போட்டியிட்டனர். ஓட்டுச் சீட்டு அடிப்படையில் தேர்தல் நடந்தது. வழக்கறிஞர்கள், ஆர்வமாக பங்கேற்று தங்களது ஆதரவு வேட்பாளருக்கு ஓட்டளித்தனர்.

ஓட்டுப்பதிவு முடிந்து, சென்னை பார் அசோசியேஷனுக்கு ஓட்டு பெட்டி அனுப்பி வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை அங்கு நடைபெறும் என வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Advertisement