பங்குனி உத்திரத்தில் வேட்பு மனு :த.வெ.க., வேட்பாளர்கள் முடிவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 7 தொகுதிகளில் த.வெ.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பங்குனி உத்திர நாளில் வேட்பு மனு தாக்கலோடு, பிரசாரத்தை துவங்க முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டபை தொகுதிகளில் தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து த.வெ.க., வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களுக்கான, வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று 31ம் தேதி அரசு விடுமுறை என்பதால், ஏப்ரல் 1ம் தேதி மனு தாக்கல் நடக்கிறது. இந்த நாளில் முருகருக்கு உகந்த நாளான பங்குனி உத்திரம் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
முதன் முறையாக த.வெ.க., வேட்பாளர்கள் சட்டசபை தேர்தலில் களம்காண உள்ளதால், பங்குனி உத்திர திருநாளாளன 1ம் தேதி கோவில்களில் வழிபாடு நடத்தி விட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.