மதுவால் எலக்ட்ரீஷியன் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோழிமேக்கனுாரை சேர்ந்தவர் விஜயகுமார், 36. எலக்ட்ரீஷியன். இவர் மனைவி அமுதா, 28. தனியார் கார்மென்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். விஜயகுமார், சில நாட்க-ளாக அடிக்கடி மது குடித்து வந்துள்ளார். நேற்று காலை மது குடித்த விஜயகுமார், வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்து-வமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகார் படி, பாப்பி-ரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement