'தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்'
கோபி:'வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை' என்ற தலைப்பில், உறுதி மொழி ஏற்பு, கலை நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி, கோபி பஸ் ஸ்டாண்டில் நடந்தது.
இதில் பங்கேற்ற மாவட்ட தேர்தல் அலுவ-லரும், கலெக்டருமான கந்தசாமி பேசியதாவது:ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்க, அனைத்து தரப்பு மக்களும், தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். இதற்காகவே, 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறோம். அதாவது உங்களின் ஓட்டு, ஒரு ஆட்-சியை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு என்பதை புரிந்து ஓட்ட-ளிக்க வேண்டும்.
நாம் ஒரு சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்துகிறோம். அந்த மகிழ்ச்சியோடு, ஆரவாரத்தோடு, நீங்கள் அனைவரும் தேர்தல் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். கோபி பஸ் ஸ்டாண்டில், வாக்காளர்க-ளுடன், கலெக்டர் உள்ளிட்டோர் செல்பி எடுத்து கொண்டனர்.
மேலும்
-
போலீஸ் செய்திகள் விபத்தில் விவசாயி பலி
-
தேர்தல் பயிற்சி வகுப்பில் 'ஆப்சென்ட்' :ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் :ஏப்.1, 4, 6ம் தேதிகளில் விசாரணை
-
ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்: காங்., வேட்பாளர் கந்தசாமி வாக்குறுதி
-
ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா
-
கோவிந்தசாலையில் நேயம் மக்கள் கழக தலைவர் நேரு ஓட்டு சேகரிப்பு
-
தி.மு.க., வேட்பாளர்களுக்கு வரவேற்பு