புதர் சூழ்ந்து வீணாகும் பொது கழிப்பிடம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள பொது சுகாதார கழிப்பிடம் உபயோகமில்லாமல் இருப்பதால், புதர் சூழ்ந்து காணப்படுகிறது.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் மக்கள் நலனுக்காக தனியார் நிறுவனம் சார்பில், சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து கடந்த, 2023ம் ஆண்டில், இரண்டு பொது சுகாதார கழிப்பிடங்கள் கட்டப்பட்டன. தற்போது இந்த கழிப்பிடங்களை சுற்றிலும் செடி கொடிகள் முளைத்து புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது.
இந்த கட்டடத்தின் வெளிப்புற தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இல்லாமல், கற்கள், பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்டவைகள் கிடக்கிறது. இதில் ஒரு கழிப்பிட கட்டடம் மாதக்கணக்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'கழிப்பிடம் கட்டப்பட்டு சிறிது நாட்கள் கழித்து தண்ணீர் வரத்து இல்லை. இதனால் மக்கள் இதைப் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டனர். விரைவில் இதை சரி செய்ய வேண்டும் என்றனர்.
ஆண்கள் செய்வது பீடி சிகரெட் மது பாட்டில்கள் மற்றும் சேம்பூ பாக்கெட் குழியில் போடுகிறார்கள் பெண்கள் நாப்கின் மற்றும் இதர..... போட்டால் தண்ணீர் எப்படி போகும்? இதை தூய்மையாக வைக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது.... புதர் புல் பூண்டு இவைகளை நாமே சுத்தம் செய்ய முடியும்..... மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. கட்டண கழிவறை மற்றும் டாஸ்மாக் பார் இவற்றை ஏற்று நடத்துவது நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த கவுன்சிலர்கள் கையில்....மேலும்
-
விக்டோரியா எட்வர்டு மன்றத்திற்கு தேர்தல் நடத்த 6 மாதம் அவகாசம்: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
இறந்து கரை ஒதுங்கிய ராட்சத கடல் பசு
-
மதுரை தி.மு.க., பிரமுகர் வீட்டில் ஐ.டி., ரெய்டு
-
குமுளியில் கூடுதல் பஸ் வசதியின்றி ஐயப்ப பக்தர்கள், பயணிகள் அவதி
-
இடுக்கியில் வீடுகளில் பிரசவம் அதிகரிப்பு
-
ரூ.10 கோடி நகைகள் சோதனையில் சிக்கின