மண் அரிப்பால் சாலையோர பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஏனாத்துார்: ஏனாத்துாரில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், ஏனாத்துாரில் இருந்து, நல்லுார் வழியாக வையாவூர், காஞ்சிபுரம், செல்லும் சாலை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், மழை காரணமாக சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்ததில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, ஏனாத்துாரில் சாலையோரம் மண் அரிப்பால் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement