அரசு கலை கல்லுாரியில் தேசிய அறிவியல் தினம்
விழுப்புரம்: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை தலைவர் கனகசபாபதி வரவேற்றார். வேதியியல் துறைத் தலைவர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், அணுசக்தி துறைத் தலைவர் வெங்கடேசன், 'ராமன் விளைவும், இந்தியாவில் நவீன அறிவியலின் பிறப்பும்' தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, நடந்த அறிவியல் சார்ந்த போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தோடு, கல்லுாரி நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கல்லுாரி மாணவர்கள் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை பெறுவர்.
ஏற்பாடுகளை, கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் மதன்மோகன் செய்திருந்தார். தாவரவியல் துறை தலைவர் தனம் நன்றி கூறினார்.
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்