கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
கடந்த 1951 முதல் 1971 வரை சட்டசபை தொகுதியாக இருந்த கள்ளக்குறிச்சி மறுசீரமைப்பில் சின்னசேலம் தொகுதியாக மாறியது.
தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் மீண்டும் கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதி உருவாகியது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு நடந்த 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க., நேரடியாக களமிறங்கி வெற்றி பெற்றது. இதில், கடந்த 2011ம் ஆண்டு அழகுவேலுபாபு, 2016ம் ஆண்டு பிரபு, 2021ம் ஆண்டு செந்தில்குமார் ஆகியோர் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
ஒரு முறை வெற்றி பெற்றவருக்கு மறுமுறை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் புதுமுகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
தற்போது நடக்கவுள்ள சட்டசபை தேர்தலிலும் இதேமுறையை பின்பற்றி மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்திக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-:
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
-
தேர்தலுக்கு இன்னும் 25 நாள்…. இன்றைய (மார்ச் 29) தினமலர் தேர்தல் களம்!
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு