டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
விருதுநகர்: தமிழகத்தில் டாப்ஸ் எனும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு அரசாணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. செயல்முறை அணைகள் இதுவரை வரவில்லை. சிறப்பு டெட் தேர்வும் ஜூன் மாதம் நடக்கிறது. அ.தி.மு.க., அரசு வந்தால் இரண்டும் நடக்காமல் போய்விடும்என்ற அச்சத்தை உருவாக்கி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தி.மு.க., மறைமுக செக் வைத்து வருகிறது.
தமிழகத்தில் ஜனவரியில் டாப்ஸ் எனும் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் சி.பி.எஸ்.,ல் இருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீததொகையை ஓய்வூதியமாக உறுதி செய்யும் ஒரு புதிய திட்டமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் விமர்சனம் கலந்த ஆதரவு வந்தது. இத்திட்டத்தின் விரிவான செயல்முறை ஆணைகள் வெளியிட வேண்டும் என ஒவ்வொரு சங்கத்தினரும் கோரிக்கை வைத்து வந்தனர். செவி வழி தகவலாக 2026 ஜூனில் செயல்முறை ஆணைகள் வரும் என உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதே போல் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட்டில் தேர்ச்சி பெறாமல் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தகுதியை உறுதிப்படுத்த தமிழக அரசு சிறப்பு டெட் தேர்வு அறிவித்தது. இதற்கான விண்ணப்பிக்கும் பணி நடந்து வரும் சூழலில் ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. தி.மு.க., அரசு சிறப்பு டெட் தேர்வு நடத்தவும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற சலுகைகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இவை இரண்டும் தேர்தலுக்கு பின் தான் என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மீண்டும் தங்கள் அரசு அமைய விரும்பும் வகையில் மறைமுகமாக செக் வைத்ததாக தி.மு.க., நினைக்கிறது.
இந்த இரு விஷயங்கள் குறித்து அ.தி.மு.க.,வும் நம்பிக்கை அளித்தாலும் அதற்கு அச்சமூட்டும் வகையில் கட்சி சார்புடைய சில அரசு ஊழியர்கள் பீதியை கிளப்பி தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க வைக்கின்றனர்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
-
தேர்தலுக்கு இன்னும் 25 நாள்…. இன்றைய (மார்ச் 29) தினமலர் தேர்தல் களம்!
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு