வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, அழுக்கு சாமியார் கோவிலில், வேட்பாளர் பட்டியலை வைத்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழிபாடு செய்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுாரில் உள்ள அழுக்கு சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சென்றார்.
பின், கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ரங்கசாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி சார்பாக போட்டியிடும், தனது என்.ஆர்.காங்., வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் பெயர்களை, காகிதத்தில் எழுதி, அழுக்கு சாமியார் படத்தின் முன்பு வைத்து வழிபட்டார்.
கோவிலில் அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தபின், அங்கிருந்து புறப்பட்டார். அப்போது, ''எங்கள் கூட்டணிக்கு, வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது,'' என்றார்.
த.வெ.க., தலைவர் விஜய் பற்றிய கேள்விகளுக்கு, பதிலளிக்காமல், மவுனமாக சென்றார்.
இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கும் சென்று முதல்வர் ரங்கசாமி வழிபட்டார்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
-
தேர்தலுக்கு இன்னும் 25 நாள்…. இன்றைய (மார்ச் 29) தினமலர் தேர்தல் களம்!
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு