உண்மை சரி பார்ப்பு குழுவுக்கு அண்ணாமலை அறிவுரை

5

சென்னை: திமுகவின் கையாலாகாத ஆட்சியை விமர்சிக்கும்போது மட்டும் துள்ளிக்குதித்து ஓடி வருகிறது YouTurn என்ற so called fact check இணையதளம் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மத்திய சட்டத் துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேவால், பார்லிமென்டில் கேட்கப்பட்ட கேள்விக்குக் கொடுத்த பதில் தரவுகளின்படி, 2021 - 2025 வரை ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை, 39,999. இந்தத் தரவுகள், தேசிய நீதித்துறை தரவுத் தளம் படி, எடுக்கப்பட்டவை.

நான் பேசும்போது, 39,900 வழக்குகள் என்று, 99 வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி விட்டேன் என்றுதான், உண்மையில் உண்மை சரிபார்ப்பு செய்திருக்க வேண்டும். ஆனால், திமுகவின் கையாலாகாத ஆட்சியை விமர்சிக்கும்போது மட்டும் துள்ளிக்குதித்து ஓடி வரும் YouTurn என்ற so called fact check இணைய தளம், எந்த ஆதாரமும் இல்லாமல், தங்களுக்கு விருப்பமான வழக்கு எண்ணிக்கையைக் கூறி, 20,989 வழக்குகள்தான் பதிவாகியிருக்கின்றன என்று கூறுகிறது.



அதிலும் குறிப்பாக, அந்தச் சகோதரர், ஆண்டு வாரியாக வழக்கு விவரங்களைக் கூறும் போது, பதட்டத்தில், 2024ம் ஆண்டு விவரங்களை இரண்டு முறை திருப்பிக் கூறுகிறார். எங்கிருந்து வந்த அழுத்தம் என்பது தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின், இட்லிக்கு சட்னி வைத்துக் கொள்வாரா அல்லது சாம்பாரா என்ற அளவில் தான், தமிழகத்தில் சில உண்மை சரிபார்ப்புத் தளங்கள் இயங்குகின்றன.


ஆகவே, தங்கள் அறிவெல்லைக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் தலையிட்டு, தங்கள் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமென்று, இந்த so called fact check இணைய தளங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement