15ல் நடத்தை விதி அமல் இப்பதா புகார் வந்துச்சி பேனர துாக்கிட்டோம்
தமிழக சட்டசபை தேர்தல் அறிவிப்பு கடந்த, 15ல் வெளியானதை அடுத்து, நடத்தை விதிகளும் உடனே அமலுக்கு வந்துவிட்டது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணிகளால் மூடப்பட்டன. கட்சி பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டன. தலைவர்களின் படங்கள், பெயர் பொறித்த கல்வெட்டுகள் மறைக்கப்பட்டன.
அதேபோல் சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியம் அலுவலகமும், அறிவிப்பு வெளியான இரவு அன்று, பொதுப்பணித்துறையினரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் அலுவலக முகப்பின் மேற்பகுதியில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா - பாலசுப்ரமணியம் படம் போட்ட விளம்பர பலகையை அகற்றாமல் சென்றுவிட்டனர். இதுகுறித்து புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக பொதுப்பணித் துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், நேற்று முன்தினம் இரவு, அந்த பேனரை அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
செங்கோட்டையன் முதல் தூசி மோகன் வரை... தவெக பட்டியலில் இடம்பிடித்த மாற்றுக்கட்சியினர்
-
உட்கட்சி பூசலால் காங்., கட்சிக்கு தொகுதியை தாரை வார்த்த தி.மு.க., கடலுாரில் நிர்வாகிகள் 'அப்செட்'
-
குருத்தோலை பவனி
-
அன்னதானம் வழங்கல்
-
தி.மு.க., பிரசார வாகனம் ரெடி
-
7 தொகுதிகளுக்கான த.வெ.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Advertisement
Advertisement