தேர்தல் விளம்பரத்தில் இருவாச்சிக்கு கவுரவம் 

வால்பாறை: தே்ரதல் குறித்த விழிப்புணர்வு பேனர்களில் இருவாச்சி பறவையின் படம் இடம் பெற்றுள்ளது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 23ம் தேதி நடக்க உள்ளது. தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, மக்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் நுாறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட விழிப்புணர்வு பேனர்களில், இருவாச்சி பறவையின் படம் இடம் பெற்றுள்ளது.

இருவாச்சி பறவைகளை கவுரவிக்கும் வகையில் தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள இந்த படத்திற்கு, இயற்கை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement