ஓ.சிறுவயல் ஊராட்சி கணேசபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் சேதம்

காரைக்குடி: சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஓ. சிறுவயல் கணேசபுரம் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் சேதமடைந்து பெரிய குழியாக இருப்பதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஓ.சிறுவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரத்தில் 3 வீதிகள் உள்ளன. இங்கு 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். தெருக்களில் ரோடுகள் போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் ரோட்டை புதுப்பிக்கவில்லை. இது தவிர சாக்கடை கால்வாய், முறையான குடிநீர் வசதியும் செய்துதரப்படவில்லை. இதனால் இக்கிராம மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இது குறித்து கணேசபுரம் அய்யாக்கண்ணு கூறியதாவது, இங்கு ஆழ்துளை கிணறு அமைத்து, தொட்டி மூலம் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்த ஆழ்துளை கிணறு துார்ந்து போய்விட்டதால், பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் குழந்தைகள் விழும் அளவிற்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். இப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Advertisement