விளையாட்டு சர்வதேச நீச்சல் போட்டி: சென்னை வீரர் அசத்தல்
சென்னை: துபாயில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில், சென்னை வீரர் சஞ்சித் 2 தங்கம், 1 வெண்கலம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
உலக அக்வாடிக் சங்கம், துபாய் சர்வதேச அக்வாடிக் சங்கம் சார்பில், சர்வதேச நீச்சல் போட்டி துபாயில் நடந்தது. இதில், உலகின் 100 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் போட்டியிட்டனர். இதில் தமிழ்நாடு சார்பில் சென்னையின் சஞ்சீத் போட்டியிட்டார். போட்டி முடிவில் 2 தங்கம், 1 வெண்கலம் என 3 பதக்கங்கள் கைப்பற்றி அசத்தினார்.
ஆடவர் 50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 36.14 வினாடியில் போட்டி துாரத்தை கடந்து தங்கம் வென்றார். தொடர்ந்து ஆடவருக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில், 1 நிமிடம் 17 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். ஆடவர் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் போட்டி துாரத்தை 1.08 நிமிடத்தில் கடந்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மேலும்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'
-
காவலக்குடி பள்ளியில் முப்பெரும் விழா