தே.மு.தி.க.,வினர் கொண்டாட்டம்
திருத்தணி: திருத்தணி தொகுதி தே.மு.தி.க.,வினருக்கு ஓதுக்கீடு செய்ததால் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். திருத்தணி சட்டசபை தொகுதியில் தற்போது தி.மு.க., எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன் பணியாற்றி வருகிறார். இவர் மீண்டும் திருத்தணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும், தே.மு.தி.க.,விற்கு திருத்தணி தொகுதி ஓதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், தே.மு.தி.க.,வில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தே.மு.தி.க., கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருத்தணி பைபாஸ் சாலை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால், தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
-
தேர்தலுக்கு இன்னும் 25 நாள்…. இன்றைய (மார்ச் 29) தினமலர் தேர்தல் களம்!
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு
Advertisement
Advertisement