அ.தி.மு.க., வேட்பாளருக்கு கும்மிடியில் உற்சாக வரவேற்பு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், பூண்டி ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சுதாகர் போட்டியிடுவதாக, கட்சி தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது.
இதையடுத்து கும்மிடிப்பூண்டிக்கு வந்த அ.தி.மு.க., வேட்பாளரான சுதாகர், பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் எம்.ஜி.ஆர்., சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரும் பொன்னேரி தொகுதி வேட்பாளருமான சிறுணியம் பலராமன், கட்சியின் கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலர்கள் ஸ்ரீதர், சிவகுமார், மகேந்திரன், ரமேஷ், முல்லைவேந்தன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும்
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
-
தேர்தலுக்கு இன்னும் 25 நாள்…. இன்றைய (மார்ச் 29) தினமலர் தேர்தல் களம்!
-
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
-
மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்
-
முதல்வர் திறந்து வைத்த தங்கும் விடுதிக்கு உள்ளூர் திட்டக்குழுமம் அனுமதி இல்லை; மின் இணைப்பு பெற முடியாமல் கோயில் நிர்வாகம் தவிப்பு
-
அன்பழகன் பேரனுக்கு வாய்ப்பு மறுப்பு