பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

திண்டிவனம்: மயிலம் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100 பேர் முன்னாள் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

மயிலம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சண்முகம் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக மயிலம் தொகுதியில், சண்முகம் மற்றும் அவரது சகோரரர் ராதாகிருஷ்ணன் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

இதே போல் தொகுதியில் மாற்று கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், கட்சிசாராதவர்கள், இளைஞர்கள் என பலரை அ.தி.மு.க.,வில் இணைத்து வருகின்றனர்.

நேற்று மயிலம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த தீவனுார், ஆலகிராமம், கேணிப்பட்டு, பந்தமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த தி.மு.க., - த.வெ.க.,உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100 பேர் திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னினையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement