அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சருடன் மருதுசேனை அமைப்பு சந்திப்பு
திண்டிவனம்: திண்டிவனத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை, மாநில மருதுசேனை சங்கத்தின் நிறுவனத் தலைவர் சந்தித்து பேசினார்.
வரும் சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாய கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க.,விற்கு, ஆதரவு தருவதென, மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மருதுசேனை சங்கம் முடிவு எடுத்துள்ளது. சமீபத்தில் சென்னையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமியை, மருதுசேனை சங்கத்தின் நிறுவனர் ஆதிநாராயணன் நேரில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் நேற்று திண்டிவனத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்.
சந்திப்பு குறித்து ஆதிநாராயணனிடம் கேட்டதற்கு, மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்தார்.
ஆனால், வரும் தேர்தலில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியை, மருதுசேனை சங்கத்திற்கு ஒதுக்குமாறு சண்முகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதியில் தி.மு.க., அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 2021ல் வெற்றி பெற்றுள்ளார். கடந்த முறை இந்த தொகுதி அ.திமு.க., கூட்டணியில் இருந்த மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்