சாடிவயலுக்கு மேலும் ஒரு கும்கி வருகை
தொண்டாமுத்தூர்: சாடிவயல் யானைகள் முகாமுக்கு முதுமலையில் இருந்து புதிய கும்கி யானை கொண்டு வரப்படுகிறது.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயலில், நவீன வசதிகளுடன் யானைகள் முகாம் திறக்கப்பட்டது. கடந்த மாதம் டாப்சிலிப், கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இருந்து, முத்து மற்றும் காவேரி ஆகிய இரண்டு கும்கி யானைகள், சாடிவயலுக்கு கொண்டு வரப்பட்டன.
முதுமலை யானைகள் முகாமில் இருந்து கும்கி ஜான், மார்ச் 7ம் தேதி, அழைத்து வரப்பட்டது. இந்நிலையில் முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து கும்கி, சுமங்கலா, 37 நேற்று மாலை அங்கிருந்து புறப்பட்டது.
இன்று அதிகாலை சாடிவயல் யானைகள் முகாமுக்கு வந்து சேரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்
Advertisement
Advertisement