தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
- நமது நிருபர் -
'கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு தர முடியாது' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 133 தொகுதிகளில் வென்றது. உதயசூரியன் சின்னத்தில் 133 இடங்களை வென்றதால், அத்தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவதில் தி.மு.க., உறுதியாக உள்ளது. அதே நேரத்தில், அத்தொகுதிகளின் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் சிலர் மாற்றப்பட உள்ளனர். மக்களிடம் காணப்படும் அதிருப்தி காரணமாக, அவர்களுக்கு பதிலாக புதியவர்களை நிறுத்த, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
கள நிலவரம்
எனவே, 'அந்த தொகுதிகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டு வென்ற தொகுதிகள், தோற்ற தொகுதிகளின் கள நிலவரத்தை, உளவுத்துறை வாயிலாக முதல்வர் கண்டறிந்துள்ளார். அதில், கூட்டணி கட்சிகளின் சில தொகுதிகள், அவர்களுக்கு சாதகமாக இல்லை என தெரியவந்துள்ளது. அதனால், அத்தொகுதிகளை மீண்டும் ஒதுக்கப் போவதில்லை என்பதிலும் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., வரலாற்றில், தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று, ஆட்சி அமைத்ததில்லை. இந்த தேர்தலில் வென்று, தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்த வரலாறை படைக்க, ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளை விட்டுக் கொடுக்க, அவர் விரும்பவில்லை. கூட்டணி கட்சிகள் கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை அப்படியே ஒதுக்கவும் விரும்பவில்லை.
உளவுத்துறை
அதற்கு காரணம், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலரின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்றும், மக்களிடத்தில் அவர்களுக்கு நல்ல பெயர் இல்லை என்றும் முதல்வருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதனால், அந்த தொகுதிகளை மாற்றுவதிலும் உறுதியாக இருக்கிறார். இதுபோன்ற பிரச்னைகளால், வெற்றி கைநழுவி விடக்கூடாது என்றும் அவர் கருதுகிறார்.
உதாரணமாக, காங்கிரசுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியவற்றில் ஊட்டி, தென்காசி, விருத்தாசலம் போன்ற சில தொகுதிகளில், அக்கட்சி மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும் என உளவுத்துறை உஷார்படுத்தியுள்ளது.
அந்த தொகுதிகளில், காங்கிரஸ் ஓட்டு வங்கியும் சில ஆயிரத்தில் தான் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதுபோன்ற தொகுதிகளை தி.மு.க., எடுத்துக் கொண்டு, வேறு தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
வரலாறு படைப்பதை அப்புறமா பார்க்கலாம்.மூதலில் தலை தப்புமானு பாருங்க...இவுக மட்டும் திமுக வென்ற தொகுதிகளை விட்டு கொடுக்க மாட்டாய்ங்களாம்.கூட்டணி வென்றதில் மாத்துவாய்ங்களாம்.எடுபிடி கட்சிகளுக்கு இதுவும் வேணும்..இன்னும் வேணும்.அவய்ங்க ஓட்டு போடாமலா திமுக 133தொகுதியிலும் திமுக ஜெயித்தது..
தி.மு.க., வெற்றி பெற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடியாது ???? அப்போ அந்த அளவுக்கு நம்ம எம்எல்ஏ க்கள் மக்களுக்கு சேவை செஞ்சிருக்காங்களா ????
ஆட்டுடா ரங்கா ஆட்டுடா ரங்காதான், தன்மானத்தை இழந்து அடிவருடிகளாக போனவர்களுக்கு வேறு கதியில்லை
தமிழ்நாடு திமுக சொத்து இல்லை. திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்