மக்களுக்கு தி.மு.க., கொடுத்தது போதுமா?
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தி.மு.க., - எம்.பி.,
நாங்கள் நினைத்த அளவுக்கு மக்களுக்குக் கொ டுக்கவில்லை, இன்னும் அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை.
கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழர்களை, கொடும் தொற்றில் இருந்து பாதுகாத்தது மட்டுமல்ல; வாழ்வாதாரம் கொடுத்தது தி.மு.க., அரசு. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, மகளிருக்கு, 1,000 ரூபாய் உரிமை தொகை கொடுத்தது.
ஐந்து ஆண்டுகளில், மூன்று சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடந்துள்ளன. சென்னையில் சர்வதேச கார் பந்தயம் நடத்தப்பட்டது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 505 வாக்குறுதி கள் அளிக்கப்பட்டு, அதில், 405 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எந்த மாநில அரசும், முதல்வரும் செய்யாத சாதனை இது.
மத்திய அரசின் முட்டுக்கட்டையால், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட 37 திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. இப்படி துறைதோறும் சாதனைகளை, தி.மு.க., அரசு செய்துள்ளது.
அடுத்து அமையவுள்ள தி.மு.க., 2.0 ஆட்சியில், இன்னும் பலவற்றைக் கொடுப்போம். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இளைஞர்களுக்கு எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது தான் அடுத்த அரசின் முக்கிய காரணிகளாக இருக்கும் என, முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்து உள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் எதிர்பார் க்கலாம்.
வைகைச்செல்வன், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்
தி. மு.க., என்ன கொடுத்தது? ஒன்றுமே இல்லை. கொரோனா காலத்தில், பாதிப்பையும் உயிர் பலியையும் குறைத்தவர் பழனிசாமி.
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் பழனிசாமி. 'நீட்' தேர்வு விலக்கு வழங்காமல் ஏமாற்றி விட்டு, மாணவர்கள் மரணங்களை அதிகரித்தது தான், இவர்களின் சாதனை. காலை உணவு திட்டத்தை, தி.மு.க., அரசு கொண்டு வந்ததாக பெருமை பேசுகின்றனர். இந்த திட்டத்திற்கு அடித்தளம் அமைத்தவர் பழனிசாமி. அ.தி.மு.க., ஆட்சியில் ஆண்டுக்கு 100 அரசு துவக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. இன்றைக்கு அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டது. அதை சறுக்கு விளையாட்டாக தி.மு.க., அரசு மாற்றி விட்டது. குடிநீர் கட்டணம், குப்பை வரி, வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. மின் கட்டணம், பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மகளிருக்கு இலவச பயணம் எனக் கூறி விட்டு, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு, பணிக்கு செல்லும் ஆண்களின் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கழுத்து வெளுத்தாலு ம் காகம் கருடன் ஆகாது; குறுக்கு சிறுத்தாலும் கிழவன் குமரன் ஆக முடியாது என்பதை போல, தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும், தி.மு.க., இனி ஆட்சிக்கு வர முடியாது.
நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்குத் தான் தெரியும் என்று உதயநிதி சொன்னது பொய்யா கான்ஸ்டன்டைன். சீட்டு கொடுத்துட்டாங்கல்ல வண்டி வண்டியா அள்ளி விடுங்க கான்ஸ்டன்டைன் உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போச்சு தயவுசெய்து இந்த நிறைவேற்றிய 405வாக்குறுதிகளை கொஞ்சம் பட்டியலிடுகிறீர்களா. கொஞ்சம் கூட கூச்சப்படாமல் பொய் சொல்கிறீர்களே.
தி.மு.க. மக்களுக்கு கொடுத்தது ஆயிரம் இரண்டாயிரம்.முட்டு கொடுத்த கட்சிகளுக்கு இரு இலக்க கோடிகள் அடங்கிய சூட்கேஸ். எடுத்துக்கொண்டது பல்லாயிரக்கணக்கான கோடி.
இரண்டு கட்சிகளுக்கும் ஒரு கேள்வி - உங்களுடைய சம்பளத்தையோ சொத்தையோ மக்களுக்கு கொடுத்துவிட்டு பேச வேண்டும். அதை விட்டுட்டு அரசின் கஜானாவில் கைவைத்து பேசுவது நியாயமில்லை
எங்களுக்கு பத்து லட்சம் சொத்தை எப்படி பத்தாயிரம் கோடி சொத்தாக ஐந்து வருஷத்தில் சம்பாதிப்பது என்ற ஸ்கிம் சொல்லி கொடுங்க அல்லது ஒரு கோடி யாக சம்பாதிக்க சொல்லி கொடுக . 5000 தேவை இல்ல.
விஜய் சொல்வது போல் போட்ட பட்ஜெட்டில் 30% தள்ளிக் கொள்வது முன்னாள் நிதி அமைச்சர் சொன்னது போல் மாதம் 30000 கோடி தனியாக சுருட்டி வைத்துக் கொள்ளுதல் இப்படி திமுக கதைகளை எடுத்து விட்டால் 2026ல் திமுக அந்தமான் ஜெயிலில் தான் இருக்கட்டம்
தமிழா நீ சிந்தித்து ஒட்டு போடு ..
அநியாயத்துக்கு பொய் மூட்டை. அளவுக்கு மீறி. மக்கள் சிந்தனை சக்தியை இழந்து விட்டனர்.
1: கடன் சுமையை மையப்படுத்தி பொருளாதாரப் பார்வை
ஆட்சி முடியப்போகும் நேரத்தில் அள்ளி அள்ளி கொடுத்தாலும், தமிழகத்தின் கடன் சுமை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதை மறைக்க முடியாது. இலவசங்களால் ஓட்டு வாங்கலாம், ஆனால் அந்த கடனைத் திருப்பிக் கட்டப் போவது சாதாரண பொதுமக்கள்தான். மாநிலத்தை கடன் இல்லாத மாநிலமாக மாற்றாத எந்தத் திட்டமும் பூஜ்ஜியத்திற்குச் சமம்"
2: கடைசி நேர அவசரத்தை விமர்சித்து நிர்வாகப் பார்வை
5 வருடம் தூங்கிவிட்டு, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு 20 அரசாணைகளைத் தயார் செய்வது யாரை ஏமாற்ற? ஒரு மாணவன் வருடம் முழுவதும் படிக்காமல் கடைசி நாளில் புத்தகத்தைத் தூக்குவதைப் போல இருக்கிறது இந்த நிர்வாகம். இதில் அதிகாரிகளைப் பலிகடா ஆக்குவதுதான் வேதனை"
3: மக்கள் விழிப்புணர்வு பற்றி:-
வாக்காளர்களுக்கு 500, 1000 கொடுத்துவிட்டு 5 வருடங்கள் நம்மிடம் கோடிக்கணக்கில் வரியாகப் பிடுங்கும் இந்தச் சுழற்சி எப்போது மாறும்? காசுக்கு ஓட்டு என்பதை மக்கள் நிறுத்தும் வரை, தகுதியான தலைவர்கள் உருவாவது கடினம். திருந்த வேண்டியது ஆட்சியாளர்கள் மட்டுமல்ல, நாமும்தான்"
4: நையாண்டியாக என் தனிப்பட்ட கருத்து:-
இங்குள்ள சில அமைச்சர்கள் தங்களைச் மன்னராட்சி அமைச்சர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள் போல 5 வருடம் மக்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டு, இப்போது தேர்தல் வந்தவுடன் அள்ளி அள்ளி கொடுக்க ஆசை எனப் பேசுவது வெறும் தேர்தல் நாடகம். தனிப்பட்ட உழைப்பாளிக்கு இந்த ஆட்சியில் எந்தப் பலனும் இல்லை என்பதே கசப்பான உண்மை."
நீங்க சொல்றது சரி தான் தினமலர். என்னோட ஒரே கேள்வி தமிழ்நாட்டின் கடன் தொகை இரண்டு மடங்காக அதிகமாகியுள்ளதே. தமிழகத்தை கடன் இல்லாத மாநிலமாக மாற்றி இருந்தா என்னோட support DMK க்கு தான். நீங்க சொல்ற மாதிரி DMK என்ன செய்தாலும் கடனை அதிகமாக்கி தேர்தலை சந்தித்தால் அது 0 percentage க்கு equal. தனிப்பட்ட மனிதனாக எனக்கு DMK கிட்ட இருந்து எந்த சலுகையும் கிடைக்கல என்பது முழுக்க மறுக்க முடியாத உண்மை.மேலும்
-
தையல்காரருக்கு அரிவாள் வெட்டு: மாணவர்கள் ஐவர் கைது
-
ராஜபாளையத்தில் யார் போட்டி ஜான்பாண்டியன் ஓட்டெடுப்பு
-
வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறப்பு
-
சிறுவர்களைக் கவரும் சாயல்குடி ஏணி மிட்டாய் :விழாக்காலங்களிலும் விற்பனை
-
கால்பந்து: இந்திய அணி 'டிரா'
-
பலாத்காரம் : இரண்டாண்டுகளுக்கு பிறகு தொழிலாளி மீது வழக்கு