சித்திரக்கூடம் அரசு பள்ளிக்கு இருக்கைகள் வழங்கும் விழா

மதுராந்தகம்;வேடந்தாங்கல் அருகே சித்திரக்கூடம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு, இருக்கைகள் வழங்கும் விழா நேற்று, நடந்தது.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சியில், சித்திரக்கூடம் கிராமம் உள்ளது.

இங்கு, அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில், கற்றல் வசதியுடன் கூடிய கல்வி மூலமாக, சிறுதாமூர் சீனிவாசர் அறக்கட்டளை நிறுவனர், கவிஞர் விஜய கிருஷ்ணன் ஏற்பாட்டில், பள்ளிக்கு இருக்கைகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் கமலக்கண்ணன், வட்டார கல்வி அலுவலர் மணிவண்ணன் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.

வட அமெரிக்கா, நியூஜெர்சி பகுதியைச்சேர்ந்த கவிஞர் மேனகா நரேஷ் மற்றும் நண்பர்கள் குழுவினரின் பங்களிப்பில், 58 மாணவர்கள் அமரும் வகையில், 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ளிக்கு இருக்கைகள் வழங்கப்பட்டன.



Advertisement