கென்யா கனமழை வெள்ளத்தில் 88 பேர் பலியாகினர்
நைரோபி: கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த 6ம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால், நைரோபி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தலைநகர் நைரோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், வெள்ளத்தின் தாக்கம் குறைவதற்கு பதிலாக அதிகரித்து கொண்டே வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த 20ம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால், மேற்கு கென்யாவில் உள்ள நயான்டோ மற்றும் தானா ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மேலும் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை மழை வெள்ளம் காரணமாக, 88 பேர் பலியாகியுள்ளதாகவும், 34,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் கென்யா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியல் என்பது வாகனத்தில் அமர்ந்து கை காட்டுவது அல்ல; அண்ணாமலை விமர்சனம்
-
பிரதமர் மோடி ஏப்.,18ல் தமிழகம் வருகை; கோவை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
-
தோல்வியின் விரக்தியில் இருக்கிறார் இபிஎஸ்: நடைபயிற்சியின் போது ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
'பூத் சிலிப்' வழங்கும் பணி கலெக்டர் துவக்கி வைப்பு
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
Advertisement
Advertisement