கொலம்பியா விமானப்படை விமான விபத்தில் 66 பேர் உயிரிழப்பு

பொகோட்டா: தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் புவேர்ட்டோ லெகுயிசாமோ பகுதியில் இருந்து, விமானப்படை விமானம் 125 பேருடன் நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் 110 ராணுவ வீரர்களும், 10க்கும் மேற்பட்ட விமான ஊழியர்களும் இருந்தனர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் பெரு எல்லை பகுதியில் சென்றபோது திடீரென விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 66 வீரர்கள் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.

இது பற்றி அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளில் அனுமதித்தனர். சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

கொலம்பியா விமானப்படை வரலாற்றில் நிகழ்ந்த மோசமான விமான விபத்து இதுவாகும். முன்னதாக கடந்த பிப்ரவரி 27ல் கரன்சி நோட்டுகளுடன் சென்ற பொலிவிய ராணுவ சரக்கு விமானம் ஒன்று, லா பாஸ் நகருக்கு அருகே தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்தனர்.

Advertisement