வங்கதேசம்: திடீரென கைது செய்யப்பட்டார் முன்னாள் ராணுவ தளபதி

1

டாக்கா: வங்கதேசத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த முன்னாள் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மசூத் உத்தின் சவுத்ரி நேற்று திடீரென கைது செய்யப்பட்டார்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் தற்போது வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவரான தாரிக் ரஹ்மான் பிரதமராக உள்ளார்.

கடந்த, 2007ல், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் முக்கிய பங்காற்றியவர் அப்போதைய ராணுவ தளபதி மசூத் உத்தின் சவுத்ரி. இவர் 2008ல் நடந்த தேர்தல் வரை இரு ஆண்டுகள் நாட்டில் இடைக்கால அரசை ஏற்படுத்தியதில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் முன்னாள் ராணுவ தளபதியான மசூதை தலைநகர் டாக்காவில் உள்ள பரிதாரா இல்லத்தில் மப்டியில் சென்று போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவர் மீதான, 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எனினும் எந்தக் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Advertisement