கலை நிகழ்ச்சிகளுடன் தேர்தல் விழிப்புணர்வு

மாமல்லபுரம்: பழைய மாமல்லபுரம் சாலை, செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் இருந்து, தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க, வலியுறுத்தி பேரணி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மாலதி ெஹலன் துவக்கி வைத்தார்.

கல்லுாரி மாணவ - மா ணவியர் உள்ளிட்டோர், 100 சைக்கிள்கள், 50 கார்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றில், பேரணியாக சென்றனர்.

தேர்தல் விழிப்புணர்வு பாடல்கள் பாடி, நாடகம் நடத்தி, சிலம்பம் நிகழ்த்தி, பட்டம் பறக்க விட்டு, மாமல்லபுரம் வரை செ ன்று, 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பகுதி கடற்கரையில், மணல் சிற்பம் வடித்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

Advertisement