காலில் விழுந்து நடித்து காட்டிய 'மாஜி'; அடேங்கப்பா இது உலக நடிப்புடா சாமி

3

தேர்தல் வந்தால் பிரசாரத்தில் புதுப்புது உத்திகளைக் கையாள்வதில், முன்னாள் அமைச்சரும், தி.மு.க., விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலருமான மஸ்தான் தனி ரகம்.

பிரசாரத்தின்போது, டீக்கடைக்குள் சென்று டீ போட்டுத் தருவார். பரோட்டா கடையில் பரோட்டா போட்டு அசத்துவார். குச்சி ஐஸ் வாங்கி கொடுப்பார். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவார்.

இவர், செஞ்சியில் கிளைச் செயலர்கள், பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிக்காரர்கள், வாக்காளர்களிடம் எப்படி ஓட்டு கேட்க வேண்டும் என மேடையில் 'டெமோ' செய்து காட்டினார். 10 பேருடன் மேடையின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஓட்டு கேட்டு நடந்து சென்றார்.

அப்போது 'அம்மா கையில் ஓட்டை பார்; அப்பா கையில் ஓட்டை பார்; அண்ணன் கையில் ஓட்டை பார்; அக்கா கையில் ஓட்டை பார்' என கோஷமிட்டபடி மறுமுனைக்கு சென்றார். அங்கு சேரில் உட்கார வைத்திருந்த வயதானவரின் (கட்சிக்காரர் தான்) காலில், முதலில் அவர் விழுந்து ஓட்டு கேட்டார். பின், நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் காலில் விழுந்து ஓட்டு கேட்கும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்தனர்.

ஓட்டு கேட்டு போகும் இடத்தில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என வகுப்பு எடுத்து அசத்தினார்.

Advertisement