காஸ் சிலிண்டர், நீர் கேன்களில் 'ஸ்டிக்கர்' ஒட்டி விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி தமிழகத்தில் வரும் ஏப்., 23ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேர்தலில் 100 சதவிகிதம் ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், வீட்டு பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் மற்றும் தண்ணீர் கேன்களில் 'ஏப்., 23 தேர்தல், 100 சதவீதம் தவறாமல் ஓட்டளிப்போம், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற உறுதிமொழி அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி, மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தினேஷ்குமார், விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, ஊடக மைய பொறுப்பு அலுவலர் மோகன், கிருஷ்ணகிரி பி.டி.ஓ., சிவபிரகாசம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement