விழிப்புணர்வு உறுதிமொழி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி, கோலப்போட்டி நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பள்ளி வளாகத்தில் விழிப்புணர்வு வாசகத்துடன் கோலம் வரைந்தனர்.

மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தேர்தலில் ஓட்டளிக்க செய்ய வேண்டும். ஓட்டுக்கு எந்த பணமும் பெறக்கூடாது என கூறுமாறு வலியுறுத்தினர். பின் ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

Advertisement